சென்னை: கோர்ட் உத்தரவிட்ட ரூ.1 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் கட்டியதால், நடிகர் விக்ரமின் தங்கலான்படத்தை வெளியிட தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அர்ஜூன்லால் சுந்தர்தாசிடம் தயாரிப் பாளர் ஞானவேல்ராஜா ரூ.10 கோடி வாங்கியது தொடர்பான இவ்வழக்கில், தங்கலான் படத்தை வெளியிடுவதற்கு முன்பு ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இத்தொகையை கட்டிவிட்டதாக தெரி விக்கப்பட்டதால்படத்தை வெளியிட தடையில்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.