சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினர்தேர்தலுக்கு நாடாளுமன்ற முஸ்லிம் உறுப்பினர்கள் பிரிவுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தல் வரும் 9ம் தேதி திங்கட்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 12ம் தேதி (வியாழக்கிழமை, பிற்பகல் 3 மணிக்கு முன்னர்), வேட்பு மனு சரிபார்த்தல் வரும் 13ம் தேதி (வெள்ளிக்கிழமை, மதியம் 1 மணிக்குள்), வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள் வரும் 17ம் தேதி (செவ்வாய்க்கிழமை) (பிற்பகல் 3 மணிக்கு முன்னர்), வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும் நாள் வரும் 18ம் தேதி (புதன்கிழமை), தேர்தல் அவசியமானால் வரும் 19ம் தேதி (வியாழக்கிழமை) அன்று ஓட்டுப் பதிவு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.