சென்னை: இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். NIRFRankings2024 இல் அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது, தரமான கல்வியில் ஒரு அளவுகோலை அமைக்கிறது.
நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம். நான்முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களால், நமது மாணவர்கள் உயர்கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்.
தமிழ்நாடு-165, டெல்லி-88, மகாராஷ்ட்ரா-80, கர்நாடகா-78, உத்தரபிரதேசம்-71, பஞ்சாப்-51, வெஸ்ட்பெங்கால்-46, கேரளா-43, ஆந்திரா-31, தெலுங்கானா-31, ஒடிசா-29, குஜராத்-29, ராஜஸ்தான்-29, ஹரியானா-25, உத்தரகாண்ட்-23, அசாம்-16, சண்டிகர்-12, ஜார்கண்ட்-12, ஜம்முகாஷ்மீர்-12, மத்தியபிரதேசஷ்-12
ஒட்டுமொத்த பிரிவில் – 18 பல்கலைக்கழகங்கள் – 22 கலை, அறிவியல் கல்லூரிகள் – 37
ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு – 9 மருத்துவக்கல்லூரிகள் – 7 பல் மருத்துவக்கல்லூரிகள் – 9
பொறியியல் கல்லூரிகள் – 14 மேலாண்மை கல்லூரிகள் – 11 ஃபார்மசி கல்லூரிகள் – 12
மாநில பல்கலைக்கழகங்கள் – 10 கட்டிடக்கலை கல்லூரிகள் – 6 வேளாண் கல்லூரிகள் – 6
சட்டக்கல்லூரிகள் – 2 புதுமையான நிறுவனங்கள் – 2 ஆகியவை தேசிய கல்வி நிறுவன தரவரிசைப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன. 926 கல்லூரிகளில் 165 தமிழ்நாட்டைச் சேர்ந்தவை.
தரமான கல்விக்கு தரக்குறியீடாக தமிழ்நாடு திகழ்வதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். மற்ற மாநிலங்களை விட தரமான உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.