சென்னை: தமிழக காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்காத காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ். சார்பில் மனு அளிக்கப்பட்டது. இன்றே அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது.