சென்னை: தமிழ்நாடு அரசு உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்கத்தின் 2024-25ம் ஆண்டிற்கான நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, மாநில தலைவராக சென்னையை சார்ந்த எஸ்.மதுரம், மாநில துணைத்தலைவர்களாக நாமக்கல் ஆர்.நல்லுசாமி, எஸ்.ஜெயக்குமார் (தலைமை செயலகம்), எஸ்.ரவிச்சந்திரன் திருச்சி, மாநில பொதுச்செயலாளராக சேலம் பெ.முனியப்பன், மாநில துணை பொதுச்செயலாளர்களாக திருவண்ணாமலை கே.பாபு, திருநெல்வேலி ப.இசக்கிமுத்து, திண்டுக்கல் ஜி.ஆர்.ரமேஷ், மாநில பொருளாளராக புதுக்கோட்டை சோ.சங்கர், மாநில தணிக்கையாளராக திருவள்ளூர் எம்.சண்முகம், மாநில தலைமை நிலைய செயலாளராக மத்திய சென்னை கினார் ஆ.ஸ்டாலின், மாநில அமைப்பு செயலாளராக மா.பாஸ்கர், திருப்பத்தூர் வி.ராசுகுட்டி, மாநில பிரசார செயலாளர்களாக கன்னியாகுமரியை சார்ந்த பா.குணசேகர், திருவாரூர் சுப்பிரமணியன், மாநில மகளிர் அணி செயலாளர் திருச்சி ஆ.அபிதாம்மாள், மாநில மகளிர் அணி இணைச்செயலாளராக கோவை டி.ஆர்.ராஜேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு உதவியாளர் சங்க நிர்வாகிகள் தேர்வு
previous post