சென்னை: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி கால்வாயில் ஆக.15 முதல் தண்ணீர் திறக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அணையில் இருந்து கீழ்பவானி திட்ட கால்வாய் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்படும். 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு 23,846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளனர். ஆக.15-ம் தேதி முதல் டிசம்பர் 13ம் தேதி வரை 120 நாட்கள் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு அளித்துள்ளது.
மாவட்ட ஆட்சியர்கள், ஈரோடு. திருப்பூர் மற்றும் கரூர் ஆகியோர்களின் ஒத்திசைவினை எதிர்நோக்கி, ஈரோடு மாவட்டம் 2023 – 2024-ஆம் ஆண்டின் முதல் போக பாசனத்திற்கு, பவானிசாகர் அணையிலிருந்து. கீழ்பவானி திட்டப் பிரதானக் கால்வாய் இரட்டைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் ஒற்றைப்படை மதகுகளின் 1,03,500 ஏக்கர் பாசன நிலங்களுக்கு, 23846.40 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், 15.08.2023 முதல் 13.12.2023 வரை, 120 நாட்களுக்கு தேவைகேற்ப, தண்ணீர் திறந்து விட அனுமதி அளித்து அரசு ஆணையிடுகிறது.