சென்னை: தமிழ்நாடு அரசு இயற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா புர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு அமர்வு தீர்ப்பு வழங்கியது. திமுக அரசு அமைந்த பிறகு நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லும் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் செல்லாது என ஏற்கனவே உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்து திமுக அரசு நிறைவேற்றி அனுப்பிய மசோதாவை ஆளுநர் ரவி பல மாதங்கள் கிடப்பில் போட்டிருந்தார்.