Tuesday, December 5, 2023
Home » செவிலியர்கள் வெளிநாடு சென்று பணி முடித்து, மீண்டும் இந்தியா வரும் வரை, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

செவிலியர்கள் வெளிநாடு சென்று பணி முடித்து, மீண்டும் இந்தியா வரும் வரை, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

by Francis

சென்னை: வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் செவிலியர்கள், பணி முடித்து மீண்டும் தாயகம் திரும்பும் வரை, அவர்களுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக நிற்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மற்றும் தாதியர் குழுமம் இணைந்து நடத்தும் செவிலியர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோருடன் கலந்து கொண்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சவுதி அரேபியாவில் பணி நியமனம் பெற்ற செவிலியர்களுக்கு பயணச்சீட்டு மற்றும் ஆவணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின்; எவ்வளவு துறைகள் இருந்தாலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பணி என்பது உயரிய சேவைக்கான துறை. பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தாம் ஆய்வு செய்த போதெல்லாம், இரவு நேரங்களில் கூட, செவிலியர்களே பரபரப்பாக பணி செய்பவர்கள். நோயாளிகள் மருத்துவமனைக்குள் வந்து சேர்ந்ததிலிருந்து வெளியே செல்லும் வரை ஓர் குடும்ப உறுப்பினராகவே மாறி, அவர்களை செவிலியர்கள் கவனிப்பவர்கள்.

கொரோனா காலத்தில் குடும்பத்தை விட்டு, கொரோனா கவச உடை அணிந்து உயிரை பணயம் வைத்து பணியாற்றிய செவிலியர்களின் சேவை பாராட்டுக்குரியது. அந்த செவிலியர்களுக்கான வெளிநாட்டு வேலை வாய்ப்புகளில் பாதுகாப்பு, விசா பெறுவது உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்த விழிப்புணர்வு, இந்நிகழ்ச்சியின் மூலம் உருவாகும். ஐரோப்பியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்தியாவில் பயின்ற செவிலியர்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது.

ஒவ்வொரு நாட்டுக்கேற்ப பயிற்சியை அளித்து வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க, தமிழ்நாடு அரசின் சார்பில் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் மூலமாக 11 ஆயிரம் பேர் இதுவரை வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். செவிலியர்கள் வெளிநாடு சென்று பணி முடித்து, மீண்டும் இந்தியா வரும் வரை, தமிழ்நாடு அரசு அவர்களுக்கு உறுதுணையாக நிற்கும். வெளிநாடு சென்று கை நிறைய சம்பளம் பெற்றாலும் திரும்பவும் தமிழ்நாடு வந்து, தங்கள் பணியை செவிலியர்கள் தொடர வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?