சென்னை: தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் முதல் வாரத்தில் கூட்டத்தை நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த மாதம் கூடவுள்ள சட்டப்பேரவையில் சில முக்கிய மசோதாக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். அக்.3,4ல் முதல்வர் தலைமையில் ஆட்சியர்கள் எஸ்.பி.மாநாடு நடக்கும் நிலையில் அதன் பின் பேரவை கூடும் என்று தெரிவித்துள்ளனர்.