சென்னை: தமிழ்நாட்டில் செயல்படும் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால், ரூ.2,000 அபராதமாக விதிக்கும் வகையில் விரைவில் அரசாணை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.