சென்னை: அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக உயர்த்தப் போவதாக பரவும் தகவல் வெறும் வதந்தி என்று தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. ஓய்வு வயதை 62-ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை, அப்படி எந்த ஆலோசனையும் இல்லை. ஓய்வுவயது குறித்து சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் தமிழ்நாடு அரசு ஊழியர்களின் ஓய்வுவயது குறித்து வதந்தி பரப்ப வேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளது.