Tuesday, February 27, 2024
Home » தமிழ்நாடு அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் “மக்களுடன் முதல்வர்” சிறப்புத் திட்ட முகாம்கள்: நாளை நடைபெற உள்ளது!

தமிழ்நாடு அரசின் சேவைகள் மக்களுக்கு எளிதில் சென்றடையும் வகையில் “மக்களுடன் முதல்வர்” சிறப்புத் திட்ட முகாம்கள்: நாளை நடைபெற உள்ளது!

by Francis
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் மக்களைச் சென்றடையும் வகையிலும், நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்திடவும் “மக்களுடன் முதல்வர்” சிறப்புத் திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை (12.01.2024) நடைபெற உள்ளது. 12.01.2024 அன்று நடைபெறும் முகாம்களின் விவரம்
வ. எண்மண்டலம்வார்டு எண்முகாம் நடைபெறும் இடங்கள்
1.திருவொற்றியூர்7சி.ஆர்.வி. திருமண மண்டபம், சரவண நகர், முதல் தெரு, திருவொற்றியூர், சென்னை-19,
2.மணலி2121வது வார்டு அலுவலகம்,  பாடசாலை தெரு,  மணலி
3.மாதவரம்29ஏ.எம்.பி.எஸ். பார்ட்டி ஹால், தணிகாசலம் நகர்,  பி. பிளாக், பொன்னியம்மன் மேடு
4.தண்டையார்பேட்டை40சமூக நலக் கூடம், மங்கம்மாள் கார்டன், எல்.ஐ.ஜி. காலனி, 2வது தெரு
5.இராயபுரம்49வைத்தி திருமண மண்டபம், ஜி.ஏ. சாலை
6.திரு.வி.க.நகர்73மண்டல அலுவலகம் -6, ஸ்ட்ராஹன்ஸ் சாலை
7.அம்பத்தூர்88அன்னை திருமண மண்டபம், டி.வி.எஸ். நகர், பாடி, சென்னை-50
8.அண்ணாநகர்100அண்ணா சமூகக் கூடம், டி.பி.சத்திரம் பிரதான சாலை, சென்னை-30
9.தேனாம்பேட்டை111சமூக நலக் கூடம், மாடல் பள்ளி தெரு, ஆயிரம் விளக்கு, சென்னை-6
 10. கோடம்பாக்கம்134மாநகராட்சி விளையாட்டு மைதானம்,  பக்தவச்சலம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33
140வெற்றி கிருஷ்ணன் மஹால், கோவிந்தன் சாலை, மேற்கு மாம்பலம், சென்னை-33
11.வளசரவாக்கம்145தயாசதன் அகர்வால் வித்யாலயா பள்ளி, பி.எச்.சாலை, நெற்குன்றம், சென்னை-107
12.ஆலந்தூர்165ஶ்ரீ லட்சுமி மஹால், எண்.16, பிளாட் 27, நியூ காலனி பிரதான சாலை, ஆதம்பாக்கம், காவல்நிலையம் அருகில்
13.அடையாறு169சமூக நலக் கூடம், எல்.டி.ஜி. சாலை, சின்னமலை, சென்னை-15
174சாஸ்திரி நகர், 5வது குறுக்குத் தெரு, அடையாறு, சென்னை-20
14.பெருங்குடி–
15.சோழிங்கநல்லூர்–
வழங்கப்படும் சேவைகள்
நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் வழங்கப்படும் கட்டுமான வரைபட ஒப்புதல், சொத்துவரி/குடிநீர் வரி பெயர் மாற்றங்கள், வர்த்தக உரிமம், குடிநீர்/கழிவுநீர் இணைப்பு, பிறப்பு/இறப்புச் சான்றிதழ், திடக்கழிவு மேலாண்மை, PMSVANidhi, காலிமனை வரிவிதிப்பு, சாலையோர வியாபாரிகள் அடையாள அட்டை, தொடர்பாகவும், எரிசக்தித் துறை / தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் வழங்கப்படும் புதிய மின் இணைப்பு, மின் கட்டண மாற்றங்கள், மின் இணைப்பு பெயர் மாற்றம், கூடுதல் மின் சுமை கட்டணங்கள் தொடர்பாகவும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் வழங்கப்படும் பட்டா மாறுதல்/பட்டா உட்பிரிவு/இணைய வழி பட்டா/நில அளவீடு (அத்து காண்பித்தல்), வாரிசுச் சான்றிதழ்/சாதிச் சான்றிதழ்/வருமானச் சான்றிதழ்/இருப்பிடச் சான்றிதழ் மற்றும் இதர சான்றிதழ்கள்,  முதியோர்/விதவை/கணவனால் கைவிடப்பட்டவர்/மாற்றுத்திறனாளி/முதிர்க்கன்னி/ மூன்றாம் பாலினத்தோருக்கான உதவித் தொகைகள் தொடர்பாகவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, பராமரிப்பு உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், சக்கர நாற்காலி, மூன்று சக்கர வண்டி, செயற்கை கால், காது கேட்கும் கருவி மற்றும் இதர உதவி உபகரணங்கள் தொடர்பான கோரிக்கைகள், சுயதொழில் வங்கிக் கடனுதவி, கல்வி உதவித் தொகை, தொழில் பயிற்சி மற்றும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு அட்டை தொடர்பாகவும்,
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் நல வாரியங்களில் உறுப்பினர் பதிவு, பதிவு புதுப்பித்தல் மற்றும் ஓய்வூதியம்/ உதவித்தொகை தொடர்பாகவும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறை சார்பில் வழங்கப்படும் கட்டுமான வரைபட ஒப்புதல், நில உபயோக மாற்றத்திற்கான ஒப்புதல், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய  வீடு வேண்டிய விண்ணப்பம், வீட்டு வசதி வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான விற்பனை பத்திரம், தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட ஒதுக்கீடுகளுக்கான ஆணை/ விற்பனை பத்திரம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்,  புதுமைப் பெண் கல்வி உதவித் திட்டம், ஆதரவற்றோருக்கான உதவித்தொகை தொடர்பாகவும், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் வழங்கப்படும் கல்வி உதவித்தொகை மற்றும் வீட்டுமனை/இணையவழி பட்டா தொடர்பாகவும், தாட்கோ கடனுதவிகள், டாம்கோ, டாப்செட்கோ கடனுதவிகள், கூட்டுறவு கடனுதவிகள், மகளிர் சுயஉதவிக் குழு கடனுதவிகள் மற்றும் தொழில் முனைவோருக்கான கடனுதவி (DIC) தொடர்பான மனுக்களையும் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்களது மனுக்களை முகாம் நடைபெறும் நாட்களில் குறிப்பிடப்பட்டுள்ள வார்டு மற்றும் முகவரியில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ள “மக்களுடன் முதல்வர்” சிறப்பு முகாம்களில் சமர்ப்பித்து பயன்பெறுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது கோரிக்கைக்கு ஏற்ப தொடர்பு ஆவணங்களையும் எடுத்துவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.

You may also like

Leave a Comment

15 + nine =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi