சென்னை: பூந்தமல்லி – பரந்தூர் வரையிலான 52.94 கி.மீ தூர மெட்ரோ ரயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் செயல்படுத்தப்பட உள்ளது. விரிவான திட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை 52.94 கி.மீ தூர மெட்ரோ ரயில் திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பரந்தூரில் முன்மொழியப்பட்ட புதிய விமான நிலையம், திருமழிசையில் முன்மொழியப்பட்ட பேருந்து நிலையம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரை செய்வதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை, தமிழ்நாடு அரசிடம் கடந்தாண்டு சமர்பிக்கப்பட்டது. இந்த வழித்தடம் தோராயமாக 43.63 கி.மீ நீளத்திற்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையத்துடன் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக பூந்தமல்லி – சுங்குவார்சத்திரம் வரை 27.9 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமையவுள்ளது. ரூ. 8,779 கோடி மதிப்பீட்டில் மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.