சென்னை: மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் கலந்தாய்வுக் கூட்டம் ராயப்பேட்டையில் நேற்று நடந்தது. மத்திய சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் சிவ ராஜசேகரன் தலைமை வகித்தார். கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது: காங்கிரஸ் கட்சியில் கருத்து சுதந்திரம், ஜனநாயகம் உள்ளது. ஆனால், எந்த கருத்தை எப்போது பேசவேண்டும் என்று அறிந்து பேசவேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறேன். இன்னும் 2 மாவட்டங்கள் மட்டுமே சுற்றுப்பயணம் செல்ல வேண்டும். வருகிற 31ம் தேதியுடன் சுற்றுப்பயணம் முடிவடைகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் கட்சி கட்டமைப்பு, வலிமை எப்படி உள்ளது என்பது குறித்து அறிக்கையாக காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே மற்றும் ராகுல் காந்தியிடம் வழங்க இருக்கிறோம். அதன் பிறகு தமிழக காங்கிரசில் நிர்வாகிகள் மாற்றம் வரும். இவ்வாறு அவர் பேசினார். இதில், முன்னாள் எம்.பி. ஜே.எம்.ஆரூண், துணைத் தலைவர் சொர்ணா சேதுராமன், அமைப்பு செயலாளர் ராம் மோகன், பொதுச் செயலாளர்கள் ரங்கபாஷ்யம், தளபதி பாஸ்கர், மாவட்ட பொருளாளர் ஜியாவுதீன், வழக்கறிஞர் எஸ்.கே.நவாஷ், ஐ.ஓ.சி.பாலு, எஸ்.எம். குமார், எம்.ஜோதி, கவுன்சிலர் சுகன்யா செல்வம், சர்க்கிள் தலைவர்கள் வாசுதேவன், தணிகாசலம், கராத்தே ஆர்.செல்வம், ஷாஜகான், செல்லப்பா, கருப்பையா, கண்ணன், ஏ.ஜி.மணி, ஜஹிருதீன் உள்பட பலர் பங்கேற்றனர்.