தமிழ்நாடு அரசின் கால்நடை அறிவியல் துறையில் காலியாக உள்ள 38 இடங்களுக்கு பி.விஎஸ்சி படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் விவரம்:
1. Research Assistant: 14 இடங்கள். சம்பளம்: ரூ.56,100- 2,05,700. வயது: 32க்குள். தகுதி: எம்.வி.எஸ்சி பட்டம் பெற்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
2. Manager (Veterinary): 24 இடங்கள். சம்பளம்: ரூ.55,500- 1,75,700. வயது: 32க்குள். தகுதி: B.V.Sc., &A.H பட்டம் பெற்றிருக்க வேண்டும். படிப்பை தமிழ்நாடு கால்நடை அறிவியல் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயது 1.07.2023 தேதியின்படி கணக்கிடப்படும். பொது பிரிவினர்கள் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
கட்டணம்: ரூ.150/-. தேர்வு கட்டணம் ரூ.200/-. எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகள்/ஆதரவற்ற விதவைகளுக்கு தேர்வு கட்டணம் கிடையாது.
டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு சென்னை, மதுரை, கோவை ஆகிய மையங்களில் நடைபெறும்.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.10.2023.