சென்னை: தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர், ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எழும்பூர், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்கிறது. ஆலந்தூர், ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை அடுத்த ஆவடி, திருமுல்லைவாயல், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து கொண்டிருக்கிறது. கோபிசெட்டிப்பாளையம், கரட்டூர், மொடச்சூர், வடுகபாளையம், கள்ளிப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் கனமழை பெய்து வருகிறது.
இதேபோல், நாமக்கல் பால்மடை, செங்கோடம்பாளையம், கொல்லப்பட்டி, மண்டகபாளையம், குமாரமங்கலத்தில் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. கரூர் நகர பகுதிகளான பேருந்து நிலையம், தான்தோன்றிமலை, வையாபுரி நகர், வெங்கமேட்டில் கனமழை பெய்கிறது. தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் நத்தம், வேலம்பட்டி, கோயில்பட்டி, தர்பார் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.