தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 13 செ.மீ. மழை பெய்துள்ளது. தேனி மாவட்டம் வீரபாண்டி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் தலா 11 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. போடிநாயக்கனூர், செங்கோட்டை, திருப்பூரில் தலா 10 செ.மீ. மழை பெய்துள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தம்மம்பட்டி (சேலம்), ஈரோடு மாவட்டம் எலந்தகுட்டைமேடு, ராமநாதபுரம், எடப்பாடி, குமாரபாளையத்தில் தலா 9 செ.மீ. மழை, ஆண்டிபட்டி, ராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கம், நாமக்கல் மாவட்டம் மோகனூர், பட்டுக்கோட்டையில் தலா 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.