சென்னை: தமிழ்நாட்டில் தீண்டாமைக்கு எதிரான பயணம் நீண்ட நெடியது என்று தமிழக காங்.கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். கே.எஸ்.அழகிரியிடம் நீட் விலக்குக்காக கையொப்பத்தை அமைச்சர் உதயநிதி பெற்றார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.எஸ்.அழகிரி, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டியது அவசியம். மக்கள் மனதை மாற்ற வேண்டியது அவசியம் என்று கூறினார்.