Saturday, September 23, 2023
Home » தமிழ்நாடு சுற்றுலாத்துறை விருதுகள் செப்டம்பர் 27ம் தேதி வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

தமிழ்நாடு சுற்றுலாத்துறை விருதுகள் செப்டம்பர் 27ம் தேதி வழங்கப்படுகிறது: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

by Mahaprabhu

சென்னை: தமிழ்நாடு மனதை மயக்கும் நிலப்பரப்புகள், கலாச்சார பாரம்பரியம், கட்டடக்கலை, மலைத்தொடர்கள், நீண்ட கடற்கரைகள், ஆர்ப்பரிக்கும் நீர்வீழ்ச்சிகள், பாரம்பரிய கலை வடிவங்கள், புகழ்பெற்ற கைவினைப் பொருட்கள் ஆகியவற்றை கொண்டு, கதைகள் முடிவடையாத இடமாக உள்ளதால் உலகமெங்கும் இருந்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும், உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வருகை தருகின்றார்கள். தமிழ்நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டை தொடர்ந்து நிலைநிறுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுற்றுலாவில் வெற்றியாளர்கள், பயண ஏற்பாட்டாளர்கள் மற்றும் புதிய உத்திகளை கையாள்பவர்களுக்கு தமிழ்நாடு சுற்றுலாத்துறை 2022 ஆம் ஆண்டு முதல் சுற்றுலா விருதுகளை அறிமுகப்படுத்தி வழங்கி வருகிறது. இவ்விருதுகள் ஆண்டுதோறும் உலக சுற்றுலா தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக செப்டம்பர் 27 அன்று வழங்கப்படவுள்ளன. இவ்விருதுகள் சுற்றுலா தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், மாநிலத்தில் பல்வேறு சுற்றுலா பங்குதாரர்களிடையே சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கத்துடன் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்க வழிவகுக்கும்.

விருதுகளின் வகைப்பாடுகள்:

1. தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Inbound Tour Operator)

2. சிறந்த உள்நாட்டு சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Domestic Tour Operator)

3. சிறந்த பயண பங்குதாரர் (Best Travel Partner)

4. சிறந்த விமான பங்குதாரர் (Best Airline Partner)

5. சிறந்த தங்குமிடம் (Best Accommodation)

6. சிறந்த உணவகம் (Best Restaurant)

7. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சிறந்த உணவகம், தங்குமிடம் மற்றும் படகு இல்லம் (Tamil Nadu Tourism Development Corporation Star Performer)

8. சுற்றுலா ஊக்குவிப்பிற்கான சிறந்த மாவட்டம் (Tourism Promotion Award (Best District))

9. சுத்தமான சுற்றுலாத்தலம் (Cleanest Tourism Destination)

10. பல்வேறு சுற்றுலாப் பிரிவுகளின் சிறந்த ஏற்பாட்டாளர் (Best Niche Tourism Operator)

11. சிறந்த சாகச மற்றும் தங்கும் முகாம்கள் சுற்றுலா ஏற்பாட்டாளர் (Best Adventure Tourism and Camping site Operator)

12. சிறந்த MICE சுற்றுலா அமைப்பாளர் (Best Meetings Incentives Conference and Exhibition (MICE) Organizer)

13. சமூக ஊடகங்களில் அதிக அளவில் தாக்கத்தை ஏற்படுத்துபவர் (Best Social Media Influencer)

14. சிறந்த சுற்றுலா வழிகாட்டி (Best Tourist Guide)

15. தமிழ்நாட்டிற்கான சிறந்த சுற்றுலா விளம்பரம் (Best Advertisement on Tamil Nadu)

16. சுற்றுலாவினை பிரபலபடுத்தும் வகையில் சிறப்பாக விளம்பரபடுத்துதல் (Best Tourism Promotion Publicity Material)

17. சுற்றுலா மற்றும் விருந்தோம்பலில் சிறந்த கல்வி நிறுவனம் (Best Educational Institution for Tourism and Hospitality)

சுற்றுலா விருதுகளுக்கான விண்ணப்பங்களை மதிப்பீடு செய்வதற்கு சுற்றுலாத்துறையை சேர்ந்த முன்னோடிகள் மதிப்பீட்டாளர்களாக நியமிக்கப்பட்டு வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருதுகளுக்காக தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு சுற்றுலாத்துறையால் அறிவிக்கப்படும் இடத்தில் நடைபெறும் உலக சுற்றுலா தின நிகழ்ச்சியில் (27.09.2023) விருதுகள் வழங்கப்படும். விருதுகளுக்கான விண்ணப்பங்கள் www.tntourismawards.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து 15.08.2023-க்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?