தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ.25 வரை உயர்வு: ஏப்ரல் 1ம் தேதி அமல்

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 40 இடங்களில் சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயருகிறது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் 1ம் தேதி அமலுக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின்கீழ் தமிழகத்தில் மொத்தம் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளன. இந்நிலையில் சென்னையில் உள்ள சுங்கச்சாவடிகள் உட்பட தமிழகம் முழுவதும் 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டணம் உயர்கிறது. ஒவ்வொரு வகையான வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்படுகிறது.

அதன்படி சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு, சென்னை-கொல்கத்தா நெடுஞ்சாலையில் உள்ள நல்லூர் சுங்கச்சாவடி, தாம்பரம்-திண்டிவனம் நெடுஞ்சாலையில் உள்ள ஆத்தூர் சுங்கச்சாவடி, பரனூர் சுங்கச்சாவடி உள்பட 40 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. மீதமுள்ள சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ம் தேதி முதல் கட்டணம் உயருகிறது. இதனால் விலைவாசி உயர்வு அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related posts

நடிகர் பிரபு தான் அன்னை இல்லத்தின் முழு உரிமையாளர்: உயர்நீதிமன்றம்

வாணியம்பாடியில் துணிகரம் வீட்டின் வெளியே நிறுத்திய மொபட் திருட்டு

தேவாலயங்களில் ஈஸ்டர் பெருவிழா