சென்னை: துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல் அரசு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவு: உணவு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கு கழிப்பறை, ஏசி, சார்ஜிங் பாய்ன்ட், வாகன நிறுத்தம் உள்ளிட்ட வசதிகளுடன் Scandinavian வடிவமைப்பில் இணைய தொழிலாளர் கூடம் முதற்கட்டமாக, பெண் பணியாளர்கள் அதிகம் பணியாற்றும் சென்னை அண்ணா நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா எதிர்காலத்தில் பின்பற்றும் திட்டங்களை இன்றே நிறைவேற்றுவதுதான் தமிழ்நாடு ஸ்டைல். வெயிலில் வாடுபவருக்கு நிழல்மரமாக, தாகத்தில் தவிப்பவருக்கு ஒரு குவளை தண்ணீராக, துன்பத்தில் உழல்வோருக்கு ஆதரவுக்கரமாக இருப்பதுதான் திராவிட மாடல். இவ்வாறு அந்த பதிவில் கூறியுள்ளார்.