சென்னை : நவம்பர் 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நியாய விலைக் கடைகள் இயங்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. நவம்பர் 12ம் தேதி தீபாவளி பண்டிகையை ஒட்டி அனைத்து நியாயவிலை கடைகளும் 5ம் தேதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தேவையான அளவு இருப்பு வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.