சென்னை: தமிழ்நாட்டில் தொடர்ந்து நீடித்து வரும் வெயில் காரணமாக வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த மழையை பொறுத்தவரையில் சென்னை அடையாறு, ஆவடி 80 மிமீ, கொரட்டூர், அரக்கோணம், தாம்பரம், வளசரவாக்கம், சென்னை விமான நிலையம், ஆலந்தூர், மேற்கு தாம்பரம் 60 மிமீ, கோடம்பாக்கம், கொளத்தூர், அம்பத்தூர், சென்னை டிஜிபி அலுவலகம், ஐஸ்ஹவுஸ், நந்தனம், பெருங்குடி 50 மிமீ மழை பெய்துள்ளது. இந்நிலையில் மேற்கு திசையில் இருந்து வீசும் காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும், வெப்ப சலனம் காரணமாகவும் கோவை மாடடத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரின் சில இடங்களில் மாலை நேரங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.