சென்னை: தமிழ்நாட்டில் தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அக்.10ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.