Friday, February 23, 2024
Home » தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்ட திட்டங்கள் இருக்கிறது: ஆளுநர் தமிழிசை தகவல்

தமிழ்நாட்டின் மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க சட்ட திட்டங்கள் இருக்கிறது: ஆளுநர் தமிழிசை தகவல்

by Karthik Yash

நெல்லை: ‘தேசிய பேரிடர் மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிப்பதற்கு சில வழிமுறைகள், சட்ட திட்டங்கள் இருக்கிறது’ என்று ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து உள்ளார். நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று வழங்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: தேசிய பேரிடர் மாநிலமாக தமிழ்நாட்டை அறிவிப்பதற்கு சில வழிமுறைகள், சட்டதிட்டங்கள் இருக்கிறது.

தமிழ்நாடு அரசுக்கு வெள்ள நிவாரண நிதி எவ்வளவு வேண்டும் என கேட்டால் நாங்கள் அவற்றை ஆய்வு செய்து வழங்க வேண்டிய பொறுப்பில் உள்ளோம். அவற்றினை பகுதி, பகுதியாக தான் வழங்க முடியும். நான் ஆளுநராக இங்கு வரவில்லை, சகோதரியாக வந்துள்ளேன். வெள்ளத்தால் ஏற்பட்ட சேதாரங்கள், நிவாரண பணி ஆகியவை தொடர்பாக ஒரு அறிக்கை தயாரித்து பிரதமருக்கும், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும் வழங்க உள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பேட்டி அளித்த ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது என கூறிய நிலையில், அதுக்கு சட்ட திட்டங்கள் இருக்கிறது என்று தமிழிசை கூறி உள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You may also like

Leave a Comment

nineteen + four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi