சென்னை : தமிழகத்தை புறக்கணிக்கும் ரயில்வேக்கு ரூ.1,001 அனுப்பும் போராட்டம் தொடரும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். ரயில்வே சார்பில் தமிழகத்திற்கு ரூ.1,000 மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் போராட்டம் தொடரும் என்றும் செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார். மேலும் ‘குஜராத் மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நிலையில் தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் அவர் வேதனை தெரிவித்தார்.