Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ரயில்வே துறையில், ரூ.6,626 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு :ஆர்டிஐ மூலம் தகவல்

சென்னை : தமிழ்நாட்டிற்கு நடப்பாண்டு ரயில்வே துறையில், ரூ.6,626 கோடி பட்ஜெட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆர்டிஐ மூலம் தகவல் கிடைத்துள்ளது. ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ரயில்வேக்கான பட்ஜெட் குறித்த தகவல்கள் நேரடியாக வெளியிடுவது இல்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட ரயில்வேக்கான பட்ஜெட் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலில், நடப்பாண்டு தமிழ்நாட்டிற்கு ரூ.6,626 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 8 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி திண்டிவனம் - நகரி திட்டத்திற்கு ரூ.347.7 கோடி, அருப்புக்கோட்டை வழியாக மதுரை, தூத்துக்குடி திட்டத்திற்கு ரூ.55.2 கோடி, ஈசிஆர் வழியே சென்னை - கடலூர் திட்டத்திற்கு ரூ.5.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதே போல், 20 ஆண்டுகால கோரிக்கையான பழனி - ஈரோடு திட்டத்திற்கு ரூ.50 கோடியும் , செஞ்சி வழியே திண்டிவனம்- திருவண்ணாமலை ரூ.42.7 கோடியும், அத்திப்பட்டு - புத்தூர் திட்டத்திற்கு ரூ.42.7 கோடியும், தருமபுரி -மொரப்பூர் திட்டத்திற்கு ரூ.22.2 கோடியும் ஆவடி - ஸ்ரீபெரும்புதூர்- கூடுவாஞ்சேரி ரயில்வே திட்டத்திற்கு ரூ.4.27 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.