சென்னை: உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை திகழ்கிறது என சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். காவலர்கள் போற்றக்கூடிய அரசாக திராவிட மாடல் அரசு உள்ளது. காவலர்களுக்கு பல நலத்திட்டங்களை நிறைவேற்றும் அரசாக உள்ளது . 165 ஆண்டுகள் பழமையும் பெருமையும் மிக்கது தமிழ்நாடு காவல்துறை. இன்ப, துன்பங்களை மறந்து ஊருக்காக பணியாற்றும் சீருடைப் பணியாளர்களை வரவேற்கிறேன். 2-ம் நிலை காவலர்கள் முதல் தலைமை காவலர்கள் வரையிலான ஆளினர்களுக்கு வாரம் ஒரு முறை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஸ்காட்லாந்து யார்டு போலீசுக்கு இணையாக தமிழக காவல் துறை செயல்பட்டு வருகிறது எனவும் அவர் பேசியுள்ளார்.
உலக அளவில் சிறந்த காவல்துறையாக தமிழ்நாடு காவல்துறை திகழ்கிறது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
0