சென்னை: தமிழ்நாடு என்றும் அமைதிப் பூங்கா, இது கலவர பூமியாக ஒருபோதும் மாறாது என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். பொதுத்தேர்தல் நெருங்க நெருங்க, இப்படிப்பட்ட வித்தைகள், பழிதூற்றல் மேலும் மேலும் உருவாக்கப்படும். திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டது என்று போலி ஒப்பாரி, பொய் அழுகை செய்கின்றார்கள் என்று கி.வீரமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.