சென்னை: தமிழ்நாட்டில் இன்று வழக்கம்போல் ஆம்னி பேருந்துகள் இயங்கும் என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூல் செய்த காரணத்தால்,120 ஆம்னி பேருந்துகளை அரசு பறிமுதல் செய்ததை கண்டித்து, இன்று மாலை 6 மணி முதல் பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.