சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக சென்னை வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே தொடங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது.