Monday, February 26, 2024
Home » தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்

by Karthik Yash

சென்னை: தமிழ்நாட்டில் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. இதையடுத்து, 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் இருந்து வீசும் வெப்பக்காற்றும், குளிர்க் காற்றும் இணைவதன் மூலம் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. நேற்று அதிகாலை முதல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியிலும், செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், மேல் மருத்துவத்தூர், மதுராந்தகம் பகுதியில் மழை கொட்டித் தீர்த்தது. இந்தமழை நேற்று மாலை வரை தொடர்ந்தது. இந்த மழை பின்னர் திருவண்ணாமலை, ராணிப் பேட்டை மாவட்டங்களில் பெய்யத் தொடங்கியது. உள் மாவட்டங்களிலும் மழை பெய்யத் தொடங்கியது.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், அரியலூர் மாவட்டங்களிலும் மழைபெய்தது. இதில் அதிகபட்சமாக சீர்காழியில் 240மிமீ மழை பெய்துள்ளது. சிதம்பர் 230 மிமீ, வேளாங்கண்ணி 220மிமீ, நாகபட்டினம் 210மிமீ, கொள்ளிடம் 190மிமீ, நன்னிலம் 170மிமீ, சேத்தியாதோப்பு 150மிமீ, திருப்பூண்டி 140மிமீ, கொடவாசல், மரக்காணம் 130மிமீ, கடலூர் 120 மிமீ, திருவிடைமருதூர் 100 மிமீ, எண்ணூர் 90 மிமீ, திண்டிவனம், ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்டம், சென்னை சத்தியபாமான பல்கலைக் கழகம், செய்யூர், மதுராந்தகம் 90மிமீ, பொன்னேரி 80மிமீ, மழை பெய்துள்ளது. இதையடுத்து, வட மாவட்டங்களிலும் மழை நேற்று இரவும் நீடித்தது. இந்நிலையில் கடல் பகுதியில் இருந்து கடற்கரையை நோக்கி மழை நெருங்கிவந்ததால் நேற்று இரவும் மழை பெய்தது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் மழை பெய்தது.

இதுபடிப்படியாக உயர்ந்து சேலம், நாமக்கல், தர்மபுரி, கள்ளக்குறிச்சில திருப்பத்தூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், பகுதிகளில் நேற்று இரவும் கனமழை பெய்தது. இந்நிலையில், வட தமிழக கடலோரப் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தெ ன் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.

இதே நிலை 14ம் தேதி வரை நீடிக்கும். சென்னையில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். நகரில் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வட கிழக்கு பருவமழை காலத்தில் ஜனவரி மாதத்தில் மழை பெய்வது தொடர்கிறது. அந்த வகையில் இந்த ஆண்டு பருவமழையில் ஜனவரி மாதத்தில் நேற்று பெய்த மழையில் அதிகபட்சாமாக சீர்காழி, நாகப்பட்டினம், சிதம்பரம் பகுதிகளில் 245 மிமீ வரை பெய்துள்ளது. புதுச்சேரியில் 125 மிமீ மழை பெய்துள்ளது. இது ஜனவரி மாத மழையில் இயல்பான மழையைக் காட்டிலும் அதிகம். வளி மண்டல காற்று சுழற்சி காரணமாக தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

You may also like

Leave a Comment

eleven − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi