Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

எலக்ட்ரிக் பைக் எரிந்து நாசம்

திருத்தணி: திருத்தணி அருகே தரணிவராகபுரம் (பந்திகுப்பம்) கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (40). விவசாயியான இவர் நேற்று காலை வீட்டிலிருந்து தனது எலக்ட்ரிக் பைக்கில் திருத்தணி மார்க்கெட்டுக்கு சென்றார்‌. திருத்தணி கமலா திரையரங்கம் அருகில் கடப்பா டிரங்க் ரோட்டில் சென்றபோது பைக் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. பைக்கில் உள்ள பேட்டரி பகுதியில் தீ பரவியதைப் பார்த்த ரமேஷ்குமார் உடனடியாக பைக்கை சாலையோரம் நிறுத்திவிட்டு ஓடினார். உடனடியாக அங்கு காவல் பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் தீயணைப்பான் கருவி மூலம் தீயை அணைத்தனர். ஆனால் பைக் முழுவதும் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும், பைக் முழுமையாக எரிந்து சாம்பலானது.