Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயம்பேடு ஜெய் பார்க் பகுதியில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமிப்பு: போக்குவரத்து நெரிசலால் மக்கள் தவிப்பு

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு ஜெய் பார்க் பகுதியில் தனியார் வாகனங்கள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுசம்பந்தமாக வாகன உரிமையாளர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் வாகனங்கள் நிறுத்துவதை நிறுத்தவில்லை. இதன்காரணமாக ஜெய் பார்க் பகுதியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மக்கள் தவிக்கின்றனர். வாகன ஓட்டுகளின் நலன் கருதி சாலையை ஆக்கிரமித்துள்ள வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும் எனகோயம்பேடு போக்குவரத்து போலீசாருக்கு என வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வாகன ஓட்டிகள் கூறியதாவது; கோயம்பேடு ஜெய் பார்க் அருகே சாலையை ஆக்கிரமித்து தனியார் வாகனங்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு தவிக்கிறோம். வாகன உரிமையாளரிடம் பலமுறை தெரிவித்தும் கண்டுகொள்ளாமல் உள்ளனர். எனவே கோயம்பேடு போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து உடனடியாக வாகனங்களை அப்புறப்படுத்த வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.