சென்னை :தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் காலை சிற்றுண்டி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். சென்னை திருவல்லிக்கேணி மாநகராட்சி பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.திருச்சியில் அமைச்சர் நேரு, புதுக்கோட்டை முள்ளூர் பள்ளியில் அமைச்சர் ரகுபதி, மன்னார்குடி உள்ளிக்கோட்டையில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோர் காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்தனர்.