சென்னை: தமிழகத்தில் அதிகபட்சமாக கோவை மேட்டுப்பாளையத்தில் 13 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் கமுதி, தென்காசி சிவகிரி, சென்னை ஆலந்தூரில் தலா 12 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. திருவள்ளூர் புழல், தஞ்சை அதிராம்பட்டினத்தில் தலா 10 செ.மீ. மழை பதிவாகி இருக்கிறது.