சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 4 இடங்களில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மாம்பழத்துறையாறு, ஆனைக்கிடங்கு, குருந்தன்கோடு, பூதப்பாண்டியில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் இரணியல், சுருளக்கோட்டில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.