தேர்வு: டிஎன்பிஎஸ்சி -ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சர்வீஸ்கள் தேர்வு (நேர்முகத் தேர்வு அல்லாதது).
சம்பளம்: தமிழக அரசு விதிமுறைப்படி வழங்கப்படும்.
மொத்த காலியிடங்கள்: 615. ( உதவி இன்ஜினியர் (சிவில்)- 1, ஜூனியர் பிளானர்-30, உதவி இன்ஜினியர் (சிவில்)-3, உதவி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)-1, உதவி இன்ஜினியர் (சிவில்)-39, உதவி ஸ்தபதி-38, நிர்வாக இன்ஜினியர் கிரேடு-1-5, உதவி இன்ஜினியர் (வேளாண்மை இன்ஜினியரிங்)- 116, ஜூனியர் எலக்ட்ரிக்கல் இன்ஸ்பெக்டர்-2, உதவி இன்ஜினியர் (சிவில்)-9, உதவி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)-1, வேளாண்மை அதிகாரி (விரிவாக்கம்)-8, உதவி இன்ஜினியர்-92, உதவி இன்ஜினியர் (சிவில்)- 38, உதவி இயக்குநர் (தொழில் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு)-1, மீன்வள ஆய்வாளர்-3, உதவி இன்ஜினியர் (சிவில்)-2, உதவி இன்ஜினியர்-38, சுற்றுச்சூழல் விஞ்ஞானி-14, நூலகர் கிரேடு-2, உதவி இன்ஜினியர்-41, ஆராய்ச்சி உதவியாளர்-1, புள்ளியியல் ஆய்வாளர்-1, இளநிலை அறிவியல் அதிகாரி-9, இளநிலை மேலாளர் (பணியாளர் நிர்வாகம்)-1, இளநிலை மேலாளர் (நிதி மற்றும் கணக்கு)-1, கம்ப்யூட்டர் புரோகிராமர்-1, இளநிலை மேலாளர்-(தொழில்நுட்பம்)-1, கண்காணிப்பு நிறுவனங்களின் உதவி கண்காணிப்பாளர்-1, உதவி இன்ஜினியர் (சிவில்)-17, மொழி பெயர்ப்பாளர் (தமிழ் செல்)-1, சிஸ்டம் மேனேஜர்-9, உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு)-5, முதுநிலை கணக்கர்-4, உதவி மேலாளர் (சுரங்கம்)-12, திட்ட அதிகாரி-3, எக்சிக்யூக்டிவ் (பணியாளர் நிர்வாகம்)-1, புள்ளியியல் உதவியாளர்-1, சுரங்க பொறியாளர்-1, உதவி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)-1, உதவி இன்ஜினியர் (மெக்கானிக்கல்)-3, இளநிலை வேதியியலாளர்-3, சமூக அதிகாரி-15, உதவி புள்ளியியல் புலனாய்வாளர்-33, நூலகர்-1, உதவி சுற்றுலா அலுவலர்-4, தடுப்பூசி ஸ்டோர் கீப்பர்-1.
வயது; 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைத் தவிர இதர பிரிவினர்கள் அதாவது எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு அல்லது விண்ணப்பிக்கும் தொழில்நுட்ப பாடத்தில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.பேப்பர்-1 க்குரிய தமிழ் மொழி திறனறியும் தேர்வில் 10ம் வகுப்பு கல்வித்தகுதி அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும். பொதுஅறிவு, அப்டிடியூட் மற்றும் மென்டல் ஏபிலிட்டி தொடர்பான கேள்விகள் பட்டப்படிப்பு தகுதி அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும்.தேர்வுக் கட்டணம்: ரூ.100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. ஒன்டைம் ரிஜிஸ்டிரேஷன் முறையில் தங்களைப் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் இதுவரை பதிவேற்றம் செய்யாதவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2025.