சென்னை : தமிழ்நாட்டில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சன் பிக்சர்ஸ் தயாரிப்பின் நெல்சன் இயக்கத்தின் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் வெளியானது. கர்நாடகாவில் இன்று காலை 6 மணிக்கு முதல் காட்சி வெளியிடப்பட்டது. பெங்களூருவில் ஜெயிலர் படம் வெளியானதை தொடர்ந்து அங்கு ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர்.