சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜின் ராஜினாமாவை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றுக் கொண்டுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி அருண்ராஜ். இவர், தற்போது பாட்னாவில் வருமான வரித்துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வருகிறார். இவர், திடீரென்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இவரது ராஜினாமா, நிதித்துறை மூலம் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தநிலையில், அருண்ராஜின் ராஜினாமாவை முர்மு நேற்று ஏற்றுக் கொண்டார். இந்நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்த அருண்ராஜ், விரைவில் விஜய்யின் தவெகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தை சேர்ந்த ஐஆர்எஸ் அதிகாரி ராஜினாமா ஏற்பு
0