உதகை: ரயில் நிலையங்களில் இந்தி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக ஆ.ராசா குற்றச்சாட்டியுள்ளார். 100 ஆண்டு பழமையான உதகை ரயில் நிலையத்தில் இந்தியில் பதாகைகள் நிறுவப்பட்டுள்ளன. உதகை ரயில் நிலையத்தில் இந்தியில் பதாகை வைத்தது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையில் உள்ளது. இந்தி பதாகைகளை உடனே அகற்றக் கோரி ரயில்வே அமைச்சருக்கு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்காது என்று திமுக எம்.பி. ஆ.ராசா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஒருபோதும் இந்தி திணிப்பை ஏற்காது: திமுக எம்.பி. ஆ.ராசா
0