சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை எதுவும் இல்லை. கடந்த 3 மாதங்களில் தமிழ்நாட்டில் கோடை மழை 25 செ.மீ. பெய்துள்ளது.
இது இயல்பை விட 97 சதவிகிதம் அதிகம். சென்னையில் மட்டும் இயல்பை விட 129%அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த 3 மாதங்களில் ஒரு நாள் கூட 40 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெப்பம் பதிவாகவில்லை. கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக திருத்தணியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. நீலகிரி, கோவைஉள்ளிட்ட 11 மாவட்டங்களில் இயல்பை விட அதிகமாக கோடை மழை பெய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.