தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள ANM/Village Nurse பணிகளுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (TN MRB) விண்ணப்பங்களை வரவேற்கிறது.
பணி: Auxiliary Nurse Midwife/Village Health Nurse.
மொத்த காலியிடங்கள்: 2250.
வயது: 1.7.2023 தேதியின்படி பொதுப் பிரிவினர்கள் 42 வயதிற்குள்ளும், பொதுப் பிரிவினர்களில் மாற்றுத்திறனாளிகள் 52 வயதிற்குள்ளும், ஆதரவற்ற விதவைகள் 59 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவினரைத் தவிர இதர பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
சம்பளம்: ரூ.19,500-62,000. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Auxiliary Nurse Midwifery பயிற்சி அல்லது Multi Purpose Health Worker பயிற்சி பெற்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும். படிப்பானது தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.10, பிளஸ் 2, நர்சிங் படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.600/-. எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோருக்கு ₹300/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2023.