Assistant Tester-2, Assistant Training Officer-3, Planning Assistant-3, Motor Vehicle Inspector-45, Draughtsman- 183, Hostel Superintendent-2, Junior Draughting Officer- 127, Junior Technical Assistant-2, Special Overseer-22, Surveyor-57, Technical Assistant-35, Assistant Agricultural Officer-25, Field Surveyor- 299, Supervisor-4, Executive (Lab)-9, Technician-79.
வயது: 01.07.2024 தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதுக்குள்ளும், பொதுப்பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைத் தவிர இதர பிரிவினர்கள் அதாவது எஸ்சி/ அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/ மிகவும் பிற்பட்டோர்/சீர் மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய மெயின் எழுத்துத் தேர்வு ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்ெதடுக்கப்படுவர்.
கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/அருந்ததியர்/மாற்றுத்திறனாளிகளுக்கு மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 11.09.2024.