சென்னை : தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இந்திய அளவில் சாதனை படைத்திருப்பதாக ஒன்றிய அரசின் நிதி ஆயோக் பாராட்டி உள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. ரூ.1,551 கோடியில் 20 நல வாரியங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொழிலாளர் நலவாரியம் மூலம் மட்டும் 26,649 தொழிலாளர்களுக்கு ரூ.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.