சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு வனச்சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதற்கான சட்ட மசோதாவை அப்போதைய வனத்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் கடந்த ஜனவரி 11ம் தேதி தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து இந்த சட்ட மசோதா அன்றைய தினமே பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிலையில் 5 மாதங்களுக்குப் பிறகு இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின்படி வன நிலங்களை வனமற்ற நோக்கத்திற்காக வேறு பணிகளுக்குப் பயன்படுத்தும் போது எல்லாம் அந்த பயனாளர் முகமை காடு வளர்ப்பு நோக்கத்திற்காக குறிப்பிட்ட அளவிலான நிலத்தை வழங்க வேண்டும். இதேபோல் வனப் பரப்பளவை அதிகப்படுத்திம் அல்லாத நிலங்களை வனமாக அறிவித்திடும் அதிகாரம் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது.
5 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாடு திருத்த வனச்சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்
0