ராமநாதபுரம்: தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஆட்சியாக திமுக அரசு உள்ளது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் பொதுவான மக்களாட்சியை நடத்துவதால் நம்மை நிராகரிப்பவர்களே இருக்க மாட்டார்கள். மக்களுக்கு நமது ஆட்சி மீது நம்பிக்கை உள்ளது; பயனுள்ள திட்டங்களை செய்து கொண்டிருக்கிறோம். பின் தங்கிய ராமநாதபுர மாவட்டம் திமுக ஆட்சியில் தான் வளர்ச்சி கண்டது. நீண்ட காலமாக ஓடாமல் இருந்த ராமநாதசுவாமி கோயில் தேரை ஓட வைத்தோம். மத்தியில் பல ஆட்சிமாற்றங்களுக்கு வித்திட்ட முக்கிய கட்சி திமுக என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.