தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள 418 இடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்:
1. உதவி இன்ஜினியர் (எலக்ட்ரிக்கல்)- தமிழ்நாடு மின் விநியோக கழகம்: மொத்த காலியிடங்கள்: 391. சம்பளம்: ரூ.39,800-1,26,500. தகுதி: எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., அப்ரன்டிஸ் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
2. உதவி கணக்கு அதிகாரி: (தமிழ்நாடு மின் விநியோக கழகம்) 25 இடங்கள். சம்பளம்: ரூ.56,300- 1,78,000. தகுதி: சிஏ அல்லது ஐசிடிபிள்யூ படித்திருக்க வேண்டும்.
3. உதவி புரோகிராமர்: (அரசு ரப்பர் கழகம்): 1 இடம். தகுதி: கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் அல்லது தகவல் தொழில்நுட்பம் அல்லது கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பாடங்களில் எம்எஸ்சி.,
4. அக்கவுன்டென்ட்: 1 (தமிழ்நாடு மாங்கனீசு நிறுவனம்): 1 இடம். தகுதி: பி.காம் மற்றும் சிஏ இன்டர் தேர்ச்சி.
வயது: 01.07.2025 தேதியின்படி குறைந்தபட்சம் 21 வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும். பொதுப் பிரிவினர் 32 வயதிற்குள்ளும், பொதுப் பிரிவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் 42 வயதிற்குள்ளும், முன்னாள் ராணுவத்தினர் 50 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பொதுப் பிரிவைத் தவிர இதர பிரிவினர்கள் அதாவது எஸ்சி/அருந்ததியர்/எஸ்டி/பிற்பட்டோர்/மிகவும் பிற்பட்டோர்/ சீர்மரபினர் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. டிஎன்பிஎஸ்சியால் நடத்தப்படும் தமிழ் மொழித் திறன் தேர்வு மற்றும் விண்ணப்பிக்கும் பணிக்குரிய முக்கிய பாடப்பிரிவுகளிலிருந்து கேள்விகள் கேட்கப்படும். எழுத்துத் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். நேர்முகத் தேர்வு கிடையாது.
ஆக.4ம் தேதி முதல் 10ம் தேதி வரை தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வுக்கான விரிவான பாடத்திட்டம், மதிப்பெண் விவரம், தேர்வு மைய விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
தேர்வு கட்டணம்: ரூ.100 மட்டும். இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ அருந்ததியர்/ மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு கட்டணம் கிடையாது. ஒன் டைம் ரிஜிஸ்டிரேஷன் முறையில் தங்களைப் பற்றிய விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்கள் தனியாக கட்டணம் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும்.
www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2025.