ராமநாதபுரம்: தமிழ்நாட்டை திமுக நிரந்தரமாக ஆளவேண்டும் என்ற கலைஞரின் கனவை நிறைவேற்றுவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட தெரிவித்தார். திமுக தென்மாவட்ட வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சிப் பட்டறையில் முதலமைச்சர் உரையாற்றினார். தமிழகத்தை மீண்டும் ஆள வேண்டுமென கலைஞர் கண்ட கனவை நிறைவேற்றிவிட்டோம். கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணி வெற்றிகரமாக முடிந்தது. 68,036 பேர் வாக்குச்சாவடி பொறுப்பாளர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடும் தொண்டர்களை பாராட்டுகிறேன் என முதலமைச்சர் தெரிவித்தார்.