சென்னை : தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா என அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. அரசுக்கு சமையல் எண்ணெய் சப்ளை செய்த கே.டி.வி. ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிம்ட்டெட் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் சப்ளை செய்ததற்கு ரூ.200 கோடிக்கு மேல் அரசு தர வேண்டி உள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் போது, தொகையை வழங்குவது குறித்து ஜூன் 27க்குள் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நிதி நெருக்கடி நிலை நிலவுகிறதா : தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
0